Take a fresh look at your lifestyle.

லாக் டவுன்- விமர்சனம்

73

லாக் டவுன்- விமர்சனம்
மிடில் கிளாஸ் ஃபேமிலி பெண்ணான அனுபமா பரமேஸ்வரன், ஒரு நாள் தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என அனைவரும் குடித்து விட்டு ஆட்டம் போட்டு போதையில் மயங்கி கிடக்கின்றனர். சில நாட்கள் கழித்து அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பம் தவித்ததாக மருத்துவர் தெரிவிக்க அதிர்ச்சி அடைகிறார். அந்த கர்ப்பத்தை கலைக்க நினைக்கும் போது கொரோனா பரவி லாக்டவுன் வந்துவிடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? அனுபமா கர்ப்பமாக யார் காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.

அனுபமா பரமேஸ்வரன் அனிதா என்ற கேரக்டரில் உணர்வு பொங்க துணிச்சலாக நடித்துள்ளார்.மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் மற்றும் லிவிங்ஸ்டன் போன்றோர் படத்திற்கு சப்போர்ட் செய்துள்ளனர். லாக் டவுன் காலத்தில் ஒரு பெண் சந்தித்த மனிதர்கள்,எதிர் கொண்ட பிரச்சனைகள் ஆகியவற்றை நேர்த்தியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. சித்தார்த் விபின் மற்றும் என்.ஆர். ரகுநந்தன் ஆகியோரின் இசை, படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.