ஓ டி டி தளத்திலும் முத்திரை பதித்த சிறை
ஜீ 5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான “சிறை” படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் அங்கும் முத்திரை பதித்தது,உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார்.
Prev Post
Next Post