Take a fresh look at your lifestyle.

துல்கர் சல்மான் படத்தில் ஸ்ருதிஹாசன்

92

துல்கர் சல்மான் படத்தில் ஸ்ருதிஹாசன்
பவன் சடினேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆகாசம்லோ ஓக தாரா. இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் சாத்விகா, வீரவள்ளி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ போஸ்டரில் ஸ்ருதிஹாசன் மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அவர் தம் அடித்தபடி இருக்கும் காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.