ரெடியாகுது ரஜினி பயோபிக்
தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி , இந்திய சினிமா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார்.75 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரஜினி நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜெயிலர் 2 படத்தை முடித்துள்ள அவர் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு சுய சரிதை ஒன்றை எழுதி வருகிறார். இது குறித்து அவரது இளைய மகள் சௌவுந்தர்யா அளித்த பேட்டியில், அப்பா தனது வாழ்க்கையை சுய சரிதை புத்தகமாக எழுத தொடங்கி இருக்கிறார். இளம் வயதில் பட்ட கஷ்டங்கள் கண்டக்டர் ஆக பணியாற்றியது, பின்னர் சென்னைக்கு வந்து எப்படி நடிகர் ஆனார் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். மேலும் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயங்களும், ரஜினி தனது ஒவ்வொரு கேரக்டருக்கும் எப்படி எல்லாம் வேலை செய்தார் என்பது போன்ற அனைத்தும் அவர் எழுதி வரும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.
Prev Post
Next Post