Take a fresh look at your lifestyle.

புருஷன் டீசரை பார்த்த 2 மில்லியன் பேர்

101

புருஷன் டீசரை பார்த்த 2 மில்லியன் பேர்
மதகராஜா படத்திற்கு பிறகு சுந்தர் சி, விஷால் மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு ‘புருஷன்’ என டைட்டில் வைத்துள் ளனர்.இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்க,காமெடி கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை இந்த படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகி டிரெண்டிங்கில் இருக்கிறது. டீசரில் புருஷன், புருஷனா இருக்கிறது தான் முக்கியம் என தமன்னாவிடம் யோகி பாபு பேசும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அதோடு புருஷன் பட புரோமோவும் டிரெண்டிங்காகி 2 மில்லியன் பார்வைகளை கடந்து வருகிறது.