Take a fresh look at your lifestyle.

விஜே. பப்பு நடித்துள்ள ‘மைடியர் டாலி’

131

விஜே. பப்பு நடித்துள்ள ‘மைடியர் டாலி’
ஏ.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மைடியர் டாலி’.இதில் ஹீரோவாக வி.ஜே.பப்பு, ஹீரோயினாக அனுபமா நடித்துள்ளனர். மேலும் கே.பி.ஒய் ராஜவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்மமூர்த்தி சினிமாஸ் ஆர்.எம். ஜெயராம சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்ய, பாசில் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் சென்னையில் நடக்கிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய இளம் தலைமுறை யினர் மட்டுமின்றி,அனைவரும் பார்த்து ரசிக்கும் காதல், காமெடி படமாக படம் உருவாகி உள்ளது.