சமந்தாவின் மா இன்டி பங்காரம் பட டிரைலர் ரிலீஸ்
நடிகை சமந்தா சொந்தமாக தயாரித்து நடித்துள்ள மா இன்டி பங்காரம் படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால்,சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிச்சென்றது. ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தை சமந்தாவின் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.சமந்தாவின் திருமணத்திற்குப் பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வெளியீட்டற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Prev Post