‘ லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி நடித்துள்ள படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இதில் ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுபா. வீரபாண்டியன் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் பார்த்துவிட்டு படக்குழுவின் உழைப்பை பாராட்டினார்.
Next Post