Take a fresh look at your lifestyle.

பேசாமல் நடித்துள்ள விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி

148

பேசாமல் நடித்துள்ள விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி
சினிமா ரசனை மாறி பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் அதிக சவுண்ட் உள்ள படங்களை இந்த தலைமுறையினர் விரும்பி பார்த்த வருகின்றனர். இந்த சூழ்நிலையில் , அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெ டுத்துள்ளது“காந்தி டாக்ஸ்” என்ற இந்தப் படம், தனது கருத்தை சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது.இந்த படத்தை இயக்குநர் கிஷோர் பெலேகர் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முதல் முறையாக மௌனமாக நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை மூலம் பெரும் பலம் சேர்த்து உள்ளார். ஜி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 30-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.