Take a fresh look at your lifestyle.

சவுத் குயின் ஆக மாறி வரும் மமிதாபைஜு

162

சவுத் குயின் ஆக மாறி வரும் மமிதாபைஜு
இயக்குனர் கிரிஷ் ஏ.டி, இயக்கத்தில் தெலுங்கில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மமீதா பைஜூ. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து டியூட் படத்தில் நடித்தார்.தெலுங்கு ,தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. தமிழில் விஜய் உடன் ஜனநாயகன் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் நடிகர் பகத் பாசில் தயாரிப்பில், கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் மமிதா பைஜு கமிட் ஆகியுள்ளார். ‘பெத்லெம் குடும்ப யூனிட்’ என டைட்டில் வைத்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.