Take a fresh look at your lifestyle.

ரஜினி 173 படத்தை இயக்கும் சிபி சக்கரவர்த்தி

165

ரஜினி 173 படத்தை இயக்கும் சிபி சக்கரவர்த்தி
ஜெயிலர்-2 படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை கமல் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென கதை பிடிக்காததால் சுந்தர் சி அதிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தயாரிப்பாளரும் நடிகருமான கமல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் நிதிலன் சுவாமிநாதன், ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இவர்களில் யாராவது ஒருவர் ரஜினி 173 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என நேற்று அதிகாரப்பூர் வமாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும்,2027 பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு ள்ளது.