Take a fresh look at your lifestyle.

1500 கோடி வசூலை நோக்கி ரன்வீர் சிங் படம்

155

1500 கோடி வசூலை நோக்கி ரன்வீர் சிங் படம்
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங்,சாரா அர்ஜுன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் துரந்தர்.இதில் மாதவன், அக்ஷய் கன்னா போன்றோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இப்படம் ரூ.1100 கோடி வசூலை பெற்றுள்ளது. அதோடு ஷாருக்கானின் ‘பதான்’ படத்தை முந்தி உள்ளது. மேலும் இந்த படம் 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக முதல் இடத்தைபிடித்துள்ளது. காந்தாரா அத்தியாயம்-1, சாவா போன்ற படங்களின் வசூலை தவிடு பொடியாக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் 1500 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.