Take a fresh look at your lifestyle.

ஏ ஐ மூலம் மனித உணர்ச்சிகளை கடத்த முடியாது:ஏ.ஆர். ரஹ்மான்

170

ஏ ஐ மூலம் மனித உணர்ச்சிகளை கடத்த முடியாது:ஏ.ஆர். ரஹ்மான்
பிரபல வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் கருத்தாக்கம் செய்துள்ள ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள பிக் வயலின் ஷாப்பில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார்.இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதில் பேசிய ஏ ஆர் ரஹ்மான்,இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும்.நாம் அனுபவித்த வயலின் அனுபவம் அனைவருக்கும் விரிவடைய வேண்டும். இந்த வயலின் சிம்பொனி பலருக்கும் உத்வேகம் தரும்” என்றார்.