Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் படம் பற்றிய அப்டேட் கொடுத்த ருக்மணி வசந்த்

152

டாக்ஸிக் படம் பற்றிய அப்டேட் கொடுத்த ருக்மணி வசந்த்
காந்தாரா: சாப்டர் 1″ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததன் மூலம் நடிகை ருக்மிணி வசந்த் பிரபலமடைந்திருக்கிறார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார், அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் யாஷின் டாக்ஸிக் ஆகும். இப்படம் பற்றிய அப்டேட்டை ருக்மிணி பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ’நான் யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் அடுத்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில், இதற்கு முன் நடித்திராத ஒரு முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது ஒரு சவாலான திரைப்படம்.யாஷ், கீதுவும் இந்தப் படத்தை அணுகிய விதம், திரைக்கதைகள் மற்றும் படப்பிடிப்பு நடத்திய முறை ஆகியவை எனக்கு ஒரு இணையற்ற அனுபவத்தை தந்தது என்றார்.