Take a fresh look at your lifestyle.

அனஸ்வராவின் ’சாம்பியன்’ பட டிரெய்லர்இன்று ரிலீஸ்

163

அனஸ்வராவின் ’சாம்பியன்’ பட டிரெய்லர்இன்று ரிலீஸ்
மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமாஸ் தற்போது தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் ஹீரோவாக நடித்துள்ள ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.இதில், ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கியுள்ளார்.மிக்கி ஜே மேயர் படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் 25-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது‌.