Take a fresh look at your lifestyle.

நாணியை இயக்கும் பிரேம்குமார்

166

நாணியை இயக்கும் பிரேம்குமார்
பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார், ‘96′ படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அடுத்ததாக கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி மீண்டும் முத்திரை பதித்தார். தற்போது விக்ரமின் 64-வது படத்தை இயக்கவிருக்கும் பிரேம்குமார், ‘96′ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானியை வைத்து புதிய படம் இயக்கப் போகிறார்.சமீபத்தில் நானியிடம்,பிரேம்குமார் கதையைக் கூறி இருந்தார்‌,அதை கேட்ட நானி கதை நன்றாக இருக்கிறது என கூறி அதை டெவலப் செய்ய சொல்லி இருக்கிறார்.இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.