மொட்டை ராஜேந்திரனின் பட டிரெய்லரை வெளியிட்ட ஹெச். வினோத்
அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் “ராபின்ஹீட். 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை லூமியஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வினோத் வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் மறைந்த ஆர்என்ஆர் மனோகர்,கேபிஒய்.சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.
Next Post