‘அன்கில் 123’ படத்தின் கதை என்ன தெரியுமா ?
சாம் ஆன்டன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘அன்கில் 123’. இதில் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.அவருடன் நடிகை சங்கீதாவும் நடிக்கிறார். இந்த படத்தில் கதையை சாம் ஆன்டன் மற்றும் சவரி முத்து இணைந்து எழுதியுள்ளனர். ஜெரார்ட் பெலிக்ஸ் இசை அமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படம் குறித்து ஐசரி கணேஷ் கூறியது, சமூக ஊடகங்கள் மூலம் புகழ்பெற்ற பலரை நாம் பார்த்திருக் கிறோம். ஆனால் அந்த புகழுக்கு பின்னால் உள்ள உணர்ச்சி மற்றும் விலை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. தனிமை, ஒப்பீடு மற்றும் மன அழுத்தம் ஆகியவை தான் அதன் மறுபக்கம் என்கிறார்.
Prev Post