Take a fresh look at your lifestyle.

மந்தாகினியாக மாறிய பிரியங்கா சோப்ரா

73

மந்தாகினியாக மாறிய பிரியங்கா சோப்ரா
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயி னாக பிரியங்கா சோப்ரா, வில்லனாக பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் மந்தாகினி என்ற கேரக்டரில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டனர். கையில் துப்பாக்கியுடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதை தனது சமூக வலைதளத் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜமவுலி, “உலக அரங்கில் இந்திய சினிமாவை மறு வரை செய்த பெண். மீண்டும் வருக. மந்தாகினியின் எண்ணற்ற சாயல்களை உலகம் காண காத்திருக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.