Take a fresh look at your lifestyle.

காந்தா – விமர்சனம்

81

காந்தா – விமர்சனம்
தமிழ் திரை உலகில் உச்ச இயக்குனராக இருக்கும் சமுத்திரக்கனியால் பட்டை தீட்டப்பட்ட துல்கர் சல்மான் சினிமாவில் வளர்ந்து நடிப்பு சக்கரவர்த்தியாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும்
ஈகோவால் பிரிகின்றனர். இந்த நிலையில் துல்கர் சல்மான், சமுத்திரகனி கூட்டணியில் உருவாகி பாதியில் நின்று போன படத்தை மீண்டும் எடுக்கின்றனர்.அதில் ஹீரோயினாக தான் உருவாக்கிய பாக்யஸ்ரீயை நடிக்க வைத்து துல்கரை பழிவாங்க திட்டம் போடுகிறார் சமுத்திரக்கனி. ஷூட்டிங் தொடங்கியதும் சமுத்திரக்கனி நினைத்தது நடந்ததா என்பதே படத்தின் மீதி கதை. மகாதேவன் கேரக்டரில் துல்கர்சல்மானின் தோற்றமும் உடல் மொழியும் படத்திற்கு பெரிய பிளஸ் . இயக்குனராக நடித்துள்ள சமுத்திரகனி தனது அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார்.குமாரி’ என்ற நடிகை கேரக்டரில் நடித்துள்ள பாக்யஸ்ரீ போர்ஸ் அழகு பதுமையாக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்துகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ராணா நடிப்பு அற்புதம். இவர்களோடு பக்ஸ், வையாபுரி, காயத்ரி சங்கர்,ஆடுகளம் நரேன், ரவீந்திர விஜய்,நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். சினிமாவுக்குள் சினிமா என்பது பெரும்பாலும் போரடிக்கும்.ஆனால் இதில் அடுத்தடுத்து என்ன என்பதை மிகுந்த எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காட்சிகளையும் எடுத்துள்ளார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். டேனி ஒளிப்பதிவு, ஜானு
சந்தர் இசை ரசிக்க வைக்கிறது.