Take a fresh look at your lifestyle.

பீடி,சுருட்டு பிடிக்க பழகியது எப்படி?

49

பீடி,சுருட்டு பிடிக்க பழகியது எப்படி?

கீதா கைலாசம் சொன்ன சுவாரசிய தகவல்
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் அங்கம்மாள். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இதில் கீதா கைலாசம் அங்கம்மாள் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் ரவிக்கை அணியாமல் சுருட்டு பிடித்தபடி டிவிஎஸ் 50 மோட்டார் சைக்கிளில் செல்வது போல் அவர் மிரட்டலாக நடித்துள்ளார். அவரோடு சரண் ,பரணி, முல்லை அரசி,தென்றல் ரகுநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் வருகிறது. இந்த படத்தை ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம் வெளியிடுகிறது. இதையொட்டி நடந்த பிரஸ் மீட்டில் நடிகை கீதா கைலாசம் கூறியது, இதன் ஷூட்டிங் நெல்லை, களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தில் நடந்தது. நான் அங்கம்மாளாக பிடித்துள்ளேன்.இதற்காக பீடி, சுருட்டு பிடிக்க தினமும் வீட்டில் பயிற்சி எடுத்தேன். அப்போது எனது குடும்பத்தினர் இதை பழக்கமாக்கி விடாதே என்று கூறினர்.அதேபோல் ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும் என்றார்கள். முதல் இரண்டு நாள் செட்டில் அசவுகரியமாக இருந்தது,அதன் பிறகு பழகிவிட்டது. அதேபோல் டிவிஎஸ் 50 ஓட்ட வேண்டும் என்றார்கள். நல்ல வேலை எனது சிறுவயதில் ஸ்கூட்டி ஓட்டியுள்ளேன். அதனால் தட்டு தடுமாறி அந்த கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டினேன். இப்போது திரையில் பார்க்கும் பொழுது இவையெல்லாம் அந்தக் கதை டிமாண்ட் செய்தது புரிகிறது என்றார்.
இந்த பேட்டியின் போது இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் அஞ்ஜோய் சாமுவேல், மற்றொரு தயாரிப்பாளர் பெரோஸ் ரஹீம், இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.