எல்லா கேரட்டர்களிலும் நடிக்க ஆசைப்படும் அனுஷ்கா
இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள ‘காதி’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.இந்நிலையில் அனுஷ்கா அளித்த பேட்டியில் கூறியது,ஒரு நடிகையாக எல்லா கேரட்டர்களிலும் நடிக்க ஆசைப்படுவேன். இயக்குனர் கிரிஷ் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார். காதி படத்தின் கதையை என்னிடம் சொன்ன போது இது எனக்கு கிடைக்கும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இந்த கேரக்டரை என்னால் செய்ய முடியும் என்று அவர் ஊக்கப்படுத்தினார். பொதுவாக கதை என்னை உற்சாகப்படுத்த வேண்டும். கதை நாயகியாக நடிப்பது,பெண்களை மையமாக கொண்ட படம் போன்ற கதைகள் பற்றியது அல்ல. பாகுபலிக்கு பிறகு எனது கதை தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.
Prev Post
Next Post