Take a fresh look at your lifestyle.

அஜித்தை ஆச்சரியப்பட வைத்த சிறுவன்

38

அஜித்தை ஆச்சரியப்பட வைத்த சிறுவன்
நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் தீவிரம் காட்டி வருகிறார். ஜெர்மனியில் ஜிடி4 கார் ரேசிங்கில் தற்போது பங்கேற்று வருகிறார். அங்கு சென்னையை சேர்ந்த 13 வயதான ஜேடன் இமானுவேல் என்ற சிறுவன் அஜித்தை சந்தித்தார். அப்போது அந்த சிறுவன் ஒரு மோட்டார் ரேசிங் வீரர் என தெரிந்து கொண்ட அஜித், மோட்டார் ரேசிங் உடையில் இருந்த அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சிறுவன் ஜேடனிடம் உன் ஆட்டோகிராப் வேண்டும் என அஜித் கேட்டு வாங்கியுள்ளார். சிறுவனிடம் அஜித் ஆட்டோ கிராப் வாங்கிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.