Take a fresh look at your lifestyle.

கடுக்கா -விமர்சனம்

52

கடுக்கா -விமர்சனம்
பெண்களை பார்த்தாலே ஹாப்பி மூடுக்கு சென்று விடும் ஹீரோ விஜய் கௌரிஷ் வீட்டுக்கு எதிரே ஹீரோயின் ஸ்மேகா குடி வருகிறார். இதனால் செம குஷியான விஜய் கௌரிஷ் அவரை சைட் அடித்து காதலிக்க தொடங்குகிறார். மற்றொருபுறம் விஜயின் நண்பரான ஆதர்ஷ், ஸ்மேகாவை தானும் காதலிப்பதாக அவரிடம் தெரிவிக்கிறார். ஸ்மேகாவோ இருவரையும் காதலிப்பதாக ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர இருவரும் ஸ்மேகாவை நேரில் சந்தித்து அவரிடம் கேள்வி கேட்கின்றனர். அப்போது ஸ்மேகா சொன்ன பதில் அவர்கள் இருவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஸ்மேகா சொன்னது என்ன? என்பதே படத்தின் மீதி கதை நம்ம கிராமத்து இளைஞர்களின் காதல் விளையாட்டுகளை காமெடிகதைக்களத்தில் இருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.முருகரசு. பஸ் ஸ்டாண்டில் பெண்களை சைட் அடிப்பது, வெட்டியாக பொழுதை கழிப்பது என விஜய் கௌரிஷ் கிராமத்து பையனாக இயல்பாக நடித்துள்ளார். பெண்களின் வலிகளை பிரதிபலிக்கும் காட்சிகளில் ஸ்மேகா நடிப்பு கதைக்கு பெரிய பலமாக அமைந்து உள்ளது. லுங்கியில் ஆதர்ஷ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.கெவின் டிகோஸ்டா இசை. சதீஷ்குமார் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.