ஜெய்லர் 2 படத்தில் இணைந்த வித்யா பாலன்
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கின்றனர்.இதில் சுராஜ் வெஞ்சாரமூடு வில்லனாக நடித்து வருகிறார். இதில் பெரும் பகுதி கேரளா கதைக்களம் என்பதால் மோகன்லாலின் மேத்யூ கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த வரும் நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் தற்போது படத்தில் இணைந்துள்ளார்.
Prev Post
Next Post