ஆச்சர்யப்பட வைத்த எல்ஐகே பட டீசர்!
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்ஐகே பட டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது.அனிருத் குரலில், 2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கும் டீசர், பல ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. காதல் அரிதான பொருளாகிவிட்ட காலத்தில், காதலுக்கே இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என விரியும் டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும், வேறொரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனிருத்தின் சிக்னேச்சர் ஆல்பம் பாடலான “எனக்கென யாருமில்லையே” பாடல் டீசரின் முடிவில் வருவது ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Next Post