வீரவணக்கம் படம் கம்யூனிச கொள்கை பற்றி பேசும்: இயக்குனர்
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கியுள்ள படம் “வீரவணக்கம்”. இதில் சமுத்திரக்கனி மற்றும் பரத் சேர்ந்து நடித்துள்ளனர்.இதில் முக்கியமான கேரக்டரில் நடிகை சுரபி லக்ஷ்மி நடித்திருக்கிறார். வரும் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறியது, கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த கிருஷ்ணன் குட்டி மற்றும் தமிழகத்தில் கம்யூனிசத்தை வளர்த்த ஜீவானந்தம் போன்றோர் செய்த தியாகத்தை பற்றியும், அப்போது நடந்த புரட்சிகள் பற்றியும் இப்படம் பேசுகிறது. அதே நேரம் சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும் ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் என்றார்.
