Take a fresh look at your lifestyle.

தியேட்டரில் நடனமாடி அசத்திய இயக்குனர் பேரரசு

67

தியேட்டரில் நடனமாடி அசத்திய இயக்குனர் பேரரசு
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கடந்த 22-ந்தேதி மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் வெளியான இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்து வருகிறது. வடபழனி கமலா தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. விழாவில் நடிகை அபிநட்சத்திரா, படத்தின் விநியோகஸ்தர் கார்த்திக் வெங்கடேசன், கமலா தியேட்டர் உரிமையாளர் விஷ்ணு ஆகியோர் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். அதேபோல் ஃபோரம் மால் பாலாசூ தியேட்டரில் இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார்,பேரரசு, அரவிந்தராஜ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் ரசிகர்களுடன் தியேட்டரில் ஆட்டமா தேரோட்டமா பாட்டுக்கு இயக்குனர் பேரரசு நடனமாடி அசத்தினார்.