ஹீரோயினானதும் பயமாக உள்ளது; சேஷ்விதா கனிமொழி
நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. இதில் தருண் விஜய் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார்.ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கிரைம், திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப்படம் 29-ந் தேதி வெளியாகிறது.இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை சேஷ்விதா கனிமொழி பேசியது, நான் ஹீரோயின் ஆக கமிட் ஆன முதல் படம் குற்றம் புதிது. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளருக்கு நன்றி. ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது பயமும் நிறைய இருக்கிறது என்றார்.
Prev Post
Next Post