Take a fresh look at your lifestyle.

ஓர் ஆண்டுக்கு பிறகு திரையில் நயன்தாரா

108

ஓர் ஆண்டுக்கு பிறகு திரையில் நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது.2023 ஆம் ஆண்டு ஷாருக் கானுடன் சேர்ந்து நயன்தாரா நடித்த ஜவான் படம் 2024 துவக்கத்தில் அன்னபூரணி படம் வெளியாகி சர்ச்சையானது.அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் எந்த படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் நிவின் பாலியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. அதில் விரைவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இணைந்து இயக்கியுள்ளனர்.பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.