Take a fresh look at your lifestyle.

பாலாவுக்கு நோ சொன்ன 50 ஹீரோயின்கள்

40

பாலாவுக்கு நோ சொன்ன 50 ஹீரோயின்கள்
சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமான கேபிஒய்.பாலா, தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் ஷெரீப் இயக்கி உள்ளார். வரும் 5-ந் தேதி படம் வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷெரீப் பேசியது, இந்த படத்தின் கதையை பல கதாநாயகிகளுக்கு சொன்னேன். கதை யை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னவர்கள் பாலா ஹீரோ என்றவுடன் யோசித்து சொல்கிறேன் எனக் கூறிவிட்டு போனை எடுக்க மாட்டார்கள். இப்படி 50 ஹீரோயின்கள் ஓடிவிட்டனர் என்றார்.