Take a fresh look at your lifestyle.

ஒரே மேடையில் 34 படங்கள் அறிமுகம்

100

ஒரே மேடையில் 34 படங்கள் அறிமுகம்
தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இதில் பயின்ற 34 மாணவகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்,ஒளிப்பதிவாளர் கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது,தயாரிப்பாளர், விமர்சகர் தனஞ்ஜெயன்,இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன்,ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக், எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.‌