Take a fresh look at your lifestyle.

ராஜமௌலியின் ‘வாரணாசி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

111

ராஜமௌலியின் ‘வாரணாசி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்திய சினிமாவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் சோயிங் பிஸ்னஸ் நிறுவனங்களின் சார்பில் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கின்றனர். இந்த ஆக்ஷன்,த்ரில்லர் படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழாவை தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது, இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி, ‘வாரணாசி’ திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.