Take a fresh look at your lifestyle.

மவுசு குறையாத சிவாஜியின் திருவிளையாடல்

1

மவுசு குறையாத சிவாஜியின் திருவிளையாடல்

ஏபி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தில் சாவித்திரி, டி எஸ் பாலையா, முத்துராமன், நாகேஷ், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுத, கே வி மகாதேவன் இசை அமைத்துள்ளார். அப்போது ‌மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிவாஜியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 1ம் தேதி ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்து இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சிவாஜி ரசிகர்கள் இப்படத்தை பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசன்,கதாசிரியரும் இயக்குனரு மான பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் உட்பட பல பங்கேற்று பேசினர்.