Take a fresh look at your lifestyle.

மல்டிபிளக்ஸ் தியேட்டர் துவங்கிய அல்லு அர்ஜுன்

3

மல்டிபிளக்ஸ் தியேட்டர் துவங்கிய அல்லு அர்ஜுன்
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத் தில் ‘ஏஏஏ சினிமாஸை’ பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் கால் பதிப்பதுடன் , நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்.இந்த ‘ஏஏஏ சினிமாஸ்’ இந்தியாவின் முதல் எல்இடி புரொஜக்சன் மற்றும் கியூ லெஸ்சன் ஸ்கிரீனை அறிமுகப்படுத்தி யுள்ளது. 70 அடி, 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரை என்பது குறிப்பிடத்த க்கது. நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை யும் வழங்க வழி செய்து உள்ளார்.