மருத்துவமனையில் பயங்கர தீ
விஜயவாடா ரெயின்போ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் பரபரப்பு! ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் மருத்துவமனை கட்டிடத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.