Take a fresh look at your lifestyle.

மதராஸ் மாபியா கம்பெனி-விமர்சனம்

86

மதராஸ் மாபியா கம்பெனி-விமர்சனம்
சென்னையில் பிரபல ரௌடியாக இருக்கும் ஆனந்தராஜ் மதராஸ் மாபியா கம்பெனி என்ற பெயரில் ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வேலைகளை செய்தாலும் அவர் மீது ஒரு வழக்கு கூட காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. இதுகுறித்து விசாரித்து அவரை கைது செய்யும்படி ஹை கோர்ட் நீதிபதி தானாக முன்வந்து போலீசுக்கு உத்திரவிடுகிறார். அதனைத் தொடர்ந்து ஆனந்தராஜை என்கவுண்டர் செய்து பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சம்யுக்த்தாவை டிஜிபி நியமிக்கிறார். இன்னொரு புறம் அவருடைய எதிரிகள் கூடவே இருந்து கொண்டு அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஆனந்தராஜ் எதிரிகளிடம் சிக்கினாரா?அல்லது என்கவுண்டரில் பலியானாரா? என்பதே படத்தின் மீதி கதை. ரவுடி தொழிலையே ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தி,போலீசுக்கு தண்ணி காட்டும் கேரக்டரில் ஆனந்தராஜ் அழகாக நடித்துள்ளார். இறுதி காட்சியில் அவருடைய வசனங்கள் பல ரவுடிகளுக்கு பாடமாக அமையும். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக சம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் முனீஷ்காந்த் நடிப்பும் சிறப்பு.ஆனந்தராஜ் மனைவிகளாக தீபா சங்கர், சசிலயா, காதலியாக ஷகீலா ஆகிேயார் வரும் காட்சிகள் கலகலப்பு கூட்டுகிறது. அசோக் ராஜ் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு கதைக்கு பலம் சேர்த்துள்ளது.