நேஷனல் கிரஷ் நடிகையான ஸ்ரீ லீலா
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.அதன் மூலம் பாலிவுட்டில் என்று ஆனார்.பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் அவர் நடித்துள்ள ‘து மேரி ஜிந்தகி ஹே’ இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் இப்ராஹிம் அலிகான் ஜோடியாக, அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘டிலர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே ‘சூமந்தர்’ என்ற பாலிவுட் படத்திலும் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியில் நடித்துள்ள முதல் படம் வெளிவரும் முன்பே அவர் மேலும் 2 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் 64வது படத்தில் ஸ்ரீலிலா நடிக்க இருக்கிறார்.இதன் மூலம் தற்போதைய நேஷனல் கிரஷ் நடிகையாக ஸ்ரீலிலா மாறி உள்ளார்.
Prev Post
Next Post