Take a fresh look at your lifestyle.

27ல் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ்

38

27ல் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ்
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயல வில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் வரும் 27 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.