Take a fresh look at your lifestyle.

ஜெயிலர் 2 படத்தின் 2வது பாடல் ரிலீஸ்

2

ஜெயிலர் 2 படத்தின் 2வது பாடல் ரிலீஸ்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛ஜெயிலர் 2″. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோருடன் புதிதாக எஸ்.ஜே. சூர்யா, வித்யாபாலன், சுராஜ் வெஞ்சராமூடு ஆகியோரும் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் . அடுத்த மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து ‛அல்ல போலேலொ” என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இரண்டாவதாக ‛ஒன் சன் ஒன் மூன்” என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.இப்பாடலை ஹைசன்பர்க், சூப்பர் சுப்பு எழுதி உள்ளனர்.அனிருத் மற்றும் எம்எஸ் கிருஷ்ணா இணைந்து பாடி உள்ளனர்.