தென்னிந்திய டிவி, ஓடிடி சங்கம் துவக்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது , தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு துறையை சேர்ந்த பிரசாத் செயல்படுவார்.துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னட துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராகவும் , கவுரவத் தலைவர்களாக ராதிகா சரத்குமார் மற்றும் டி.ஜி.தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
