‘ சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்: கமல்ஹாசன்
பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான ‘சிங் கீதம்’ படத்துடன் மீண்டும் ரசிகர்கள் முன் வருகிறார். இயக்குனர் நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத்இசையமைத்துள் ளார். சிங் கீதம் படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி,சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது,
மாயாபஜார் முதல் தற்போதைய “சிங் கீதம்” வரை, சிங்கிதம் சீனிவாச ராவிடம் எந்த மாற்றமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் 2 கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று ‘புஷ்பக விமானம்’ என்ற படமாக வெளியானது. இப்போது 2வது கதை ‘சிங் கீதம்’ என்ற படமாக வெளியாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது 70 வயதில் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன் என்றார்.
Prev Post
Next Post