ஆர்.டி. ராஜாவின் மந்திரா ஸ்டுடியோஸ்
தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளை யும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட் பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரா கத் தனது புதிய பயணத்தைத் தொடங்கி உள்ளர். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் படமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.
Next Post