டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த பிரீத்தி முகுந்தன்!
2024-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான பிரீத்தி முகுந்தன் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளாஸ்ட், இதயம் முரளி ஆகிய படங்கள் வெற்றி அடைந்து நல்ல வசூலை பெற்றுள்ளன. இதன் மூலம் திரை உலகின் பார்வை பிரீத்தி முகுந்தன் மீது விழ தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல்க ளை சேமித்து தரும் ஐ.எம்.டி.பி. நிறுவனம் இந்திய அளவில் டாப் 10 இடங்களை பெற்றுள்ள பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு ள்ளது. அதில் நடிகை பிரீத்தி முகுந்தனும் இடம் பிடித்துள்ளார். முதல் வாரத்தில் 2-வது இடத்தையும், அடுத்த வாரத்தில் 6-வது இடத்தையும் பெற்று அசத்தியுள்ளார்.
Prev Post
Next Post