Take a fresh look at your lifestyle.

ஹங்கேரி நாட்டில் பூஜா ஹெக்டே

33

ஹங்கேரி நாட்டில் பூஜா ஹெக்டே
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். அதன் பிறகு ரஜினியின் கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். படப்பிடிப்புகளில் இருந்து ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஏதேனும் ஒரு நாட்டிக்கு டூர் செல்லும் பூஜா ஹெட்டே, கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றார். தற்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ள அவர் ஹங்கேரி நாட்டின் அழகிய புடாபெஸ்ட் நகரில் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.