பிரீத்தி அஸ்ரானிக்கு குவியும் பட வாய்ப்புகள்
அயோத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பிரீத்தி அஸ்ராணி, தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்தினகுமார் இயக்கிய 29 படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள நிறம் என்ற படத்தில் முகேன்ராவ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் அப்பா குட்டி படத்தில் அவரது மகளாகவும், எஸ் ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த பிரீத்தி அஸ்ராணி, தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவரின் வெகுளித்தனமான நடிப்பு மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி ஆகியவை ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அவருக்கு தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.