Take a fresh look at your lifestyle.

நா.முத்துக்குமார் பொன்விழாவில் கமல்

80

நா.முத்துக்குமார் பொன்விழாவில் கமல்
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திரை உலக பிரமுகர்கள் இணைந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். ‘ஆனந்த யாழை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை 19-ந் தேதி சென்னை நேரு உள் விளையாடு அரங்கில் நடக்கிறது. இதில் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா, நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆண்ட்ரியா, திப்பு, உத்தரா, உன்னி கிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் அவரின் பாடல்களை பாடுகின்றனர். சிறப்பு விருந்தினராக கமல், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.