கனிமா பாட்டுக்கு முருகதாஸ் ஆட்டம்
இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் மகள் ஹர்ஷிதா மஞ்சள் நீராட்டு விழா
அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடந்தது. இதில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்தில் இடம் பெற்ற கனிமா பாடலுக்கு மனைவி, மகன், மகளுடன் முருகதாஸ் உற்சாகமாக நடனமாடினார். இதைக் கண்டு
உறவினர்களும், நண்பர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஏற்கனவே சூர்யாவை வைத்து கஜினி ஏழாம் அறிவு ஆகிய படங்களை முருகதாஸ் இயக்கியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படத்தை இயக்கி முடித்துள்ளார்.
Prev Post
Next Post
