மீண்டும் ஹீரோவாக நடிக்கும் முனீஸ்காந்த்
முண்டாசுப்பட்டி படம் மூலம் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமான முனிஸ் காந்த், தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.கடந்த ஆண்டு ஹீரோவாக அவர் நடித்த மிடில் கிளாஸ் படம் வரவேற்பை பெற்றது.அதேபோல் சமீபத்தில் வெளியான தாய் கிழவி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தினார். இந்த நிலையில் இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் முனீஸ்காந்த் கதை நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, சாம் விஷால் இசையமைக் கிறார். இந்த படத்தை குட் ஸ்டாப் நிறுவனம் டிசார்பில் பி. டில்லி தயாரிக்கிறார்.
Prev Post
