மீசையும் முறுக்கு 2- விமர்சனம்
வடசென்னையின் அடையாளமான கானா பாடலை மூன்று தலைமுறைகளாக பாடி அதன் மூலம் சாதிக்க நினைக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. கர்நாடக இசையின் ஆதிக்கம் நிறைந்த இந்த துறையில் தனது தாத்தா கருணாஸ் மற்றும் அப்பா பாபா பாஸ்கர் ஆகியோரின் கானா இசைப் பயண கனவை நினைவாக்க போராடுகிறார். ஆனால்,வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவமானங்களை சந்திக்கிறார்.ஆனாலும் இசையை விடுவதாக இல்லை .இந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 70, 90, 2000 என மூன்று காலகட்டங்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த கதாபாத்தி ரங்களில் ஆதி அசத்துகிறார். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற உடல்மொழி, தோற்றம், பேச்சு என வித்தியாசம் காட்டியிருப்பது கவனிக்க வைக்கிறது. நாயகிகளாக வரும் கெட்டிகா சர்மா, சைத்ரா ஜெ. ஆச்சார், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். ஹர்ஷத் கான், விஜய் வரதராஜ், யோகி பாபு ஆகியோர் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.கருணாஸ்,பாபா பாஸ்கர் ஆகியோர் அனுபவமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஒரு இசைக்கலைஞனின் கனவு, 3 தலை முறைகளாக தொடரும் இசைப் போராட்டம், வாய்ப்பு மறுப்பு, அவமானம் என பல விஷயங்களை இளமை துள்ளலுடன் இயக்கியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை ரசிக்க வைக்கிறது.
